தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.
ஏற்கனவே சில நகரங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.