போராடும் மல்யுத்த வீராங்கனைகள் பொறுமை காக்க வேண்டும். இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
போராடும் மல்யுத்த வீராங்கனைகள் பொறுமை காக்க வேண்டும், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நடக்கும் விசாரணையை நம்ப வேண்டும். விளையாட்டு போட்டிகளின் நன்மதிப்பை குறைக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது"
- ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், சசிகலா உடன் சந்திப்பு. தன்னுடைய மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க சந்தித்துள்ளதாக தகவல்.
முல்லை பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!
கம்பம் பள்ளதாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் இரு போக விவசாய நிலங்களுக்கு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் நாளை திறப்பு!
--
போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு; போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்துடனான முத்தரவு பேச்சுவார்த்தை ஜூன் 9ம் தேதி மீண்டும் நடத்த முடிவு
ஊழியர் சங்கங்கள், போக்குவரத்துதுறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
போக்குவரத்துத்துறையில் வெளி ஏஜென்சிகள் மூலம் ஊழியர்களை எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக போக்குவரத்துத்துறை உறுதியளித்துள்ளது
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜுன் 9ம் தேதி அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் - சிஐடியூ மாநில தலைவர் சவுந்தர ராஜன் பேட்டி.