திண்டுக்கல் மாவட்டத்தில் பலனே அருகே.. பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முழு விவரம்.

Todays headlines video viral

இன்றைய தலைப்புச்செய்திகள்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தனியார் நூல் ஆலையில், பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது;

தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்!

-- அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் இருந்து கடுமையான பனிப்பொழிவு

8 மணி வரையிலும் பனிப்பொழிவு குறையாததால், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள், குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறது.

--

திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!

சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம் இன்று முதல் டிச.4-ம் தேதி வரை நடைபெறுகிறது!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிச.31-ம் தேதி வரை மின் கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது; 2,811 மின்வாரிய பிரிவு மையங்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன!

--

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட பிரேசில் அணி, உலகக்கோப்பையில் இன்று 2வது ஆட்டத்தில் களமிறங்குகிறது; சுவிட்சர்லாந்து அணியுடன் இரவு 9.30 மணிக்கு பலப்பரீட்சை!

--

ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாகக் கூறி, திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் அனைத்துக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்

திமுக, தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு!

Video:

Related Posts

View all