கட்சியை அடகு வைத்துவிட்டு தவிக்கின்றனர் - அதிமுகவை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்.
அன்று சுயலாபத்துக்காக டெல்லியிடம் ஆட்சியை அடகுவைத்தவர்கள், இன்று கட்சியை அடகுவைத்து தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் அண்ணாவையே மறந்து விட்டார்கள்." - உதயநிதி ஸ்டாலின்
திமுக என்ன செய்கிறது .? அண்ணாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு திமுக வை கருணாநிதி குடும்ப கட்சியாக மாற்றி ஆக்கிரமித்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, குடும்பத்தினர் அனைவரும் பெரும் பெரும் கோடிஸ்வரர்களாக மாறியிருக்கிறார்கள்.
திமுக வில் அண்ணா பெயர் அப்பாவி தொண்டர்களையும் மக்களை ஏமாற்ற ஒரு முகமூடியாகதான் பயன்படுத்தப்படுகிறது.
அண்ணாவை விட இன்பநிதி தான் திமுக வின் நாயகனாக விளங்குகிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
--
கருணாநிதி தலைவராக இருந்த போது அவருக்கு அடுத்தபடியாக பேராசிரியர் அன்பழகன் பெயரையும், அதற்கு அடுத்தபடியாக ஸ்டாலின் பெயரை போடுவார்.
ஆனால் ஸ்டாலின் தலைவரான பிறகு அவர் பெயருக்கு அடுத்தபடியாக உதயநிதி பெயரை தான் போடுகிறார்கள்.
எங்கேயும் துரை முருகன் பெயரை போடுவதில்லை. அவ்வளவு ஆணவம்.
--
முதல்வர் ஸ்டாலின் மீதும் உதயநிதி ஸ்டாலின் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா முதல்வரின் வீட்டில் ஆய்வு செய்வார்களா என தைரியம் இருந்தால் கூறுங்களேன். தமிழ்நாடு என்ன உங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்தா???
--