தமிழகத்தில் பருவ மழை முன்னேற்பாடு தீவிரம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுக்காப்பு விழிப்புணர்வு பணிகள் தீவிரம்.
பருவ மழை முன்னேற்பாடு-நடைபெறும் பணிகள்-சட்டம்&ஒழுங்கு உள்பட #ChepaukTriplicane தொகுதி மேம்பாட்டிற்காக பல்வேறு துறை அலுவலர்களுடன் ஏற்கெனவே கலந்தாலோசித்த நிலையில், சென்னை கார்ப்பரேஷன் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அடங்கிய பட்டியலை மேயர் - துணை மேயர், ஆணையரிடம் இன்று உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-- பருவமழை முடியும்வரை நடமாடும் மருத்துவ முகாம்கள் இயங்கும், சைதாப்பேட்டையில் 80% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்தன. இம்முறை சைதாப்பேட்டையில் மழை நீர் தேங்காது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
--
பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையும் என்கிற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்;
தீபாவளிக்கு முன் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளேன்” - சென்னை வால்டாக்ஸ் சாலையில் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
--
வடகிழக்கு திசை காற்றால் தமிழகத்தில் அக்,22 வரை ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு. அதன் பின்னர் சிட்ரங் புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்ததும், அக்,30ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கியதாக வானிலை மையம் அறிவிக்க வாய்ப்பு.
--
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.