கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். Video Viral.

Udhay recent election campaign video viral

கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நான் சட்டமன்றத்தில் சொன்னேன், கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று. எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. ஓபிஎஸ் மட்டுமே நாங்கள் கமலாலயம் செல்ல மாட்டோம் என சொன்னார். ஆனால் இன்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் வாயிலில் நிற்கின்றனர்.

அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அவரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள்.

-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவனை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்

-ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Video:

Related Posts

View all