இன்னும் 5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஓ.பி.எஸ். அணி ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அந்த அணியில் இருந்து விலகுகின்றனர்
கட்சிக்கு தொடர்பில்லாத நபரை அறிவித்து, அவரையும் திரும்பப் பெற்றதால் அதிருப்தி என தகவல்; செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு.
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் பன்னீர்செல்வம் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராகி விடுவார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இன்னும் 5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும் - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
வெறும் ஆடியோ வீடியோவை மட்டும் வச்சு ஓட்டிட்டு இருக்க கட்சி பாஜக
-ஈரோட்டில் நடைபெற்ற பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
சென்னை கிண்டியில் மருத்துவமனையும், மதுரையில் கலைஞர் நூலகமும் 18 மாத கால திமுக ஆட்சியில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது; மதுரை எய்ம்ஸில் இருந்து செங்கல் திருடி வந்ததாக ஒருவர் சொல்கிறார்; அவருக்கு வெட்கமாக இல்லை
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தபோது, தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்றபோது, கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்தபோது இந்த மீசை என்ன செய்தது?
- ஈரோடு கிழக்கு தேர்தல் பரப்புரையில் எடப்பாடி மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு