தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு. அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிட தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் பிரபு. மனுவை பிரபு வாபஸ் பெற்றதை தொடர்ந்து, அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அசோக் சிகாமணி.
இந்திய கிரிக்கெட்டின் அச்சாணிகளில் ஒன்றான, தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, போட்டியின்றி தேர்வாகியிருக்கும், சகோதரர் Dr.P.அசோக் சிகாமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.
“அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக தேர்வானதற்கு எதிராக பொங்கியவர்கள், இப்போது அசோக் சிகாமணிக்கு வாழ்த்து தெரிவித்து அமைதி காப்பார்கள் என்று பாஜகவினர் நக்கல்.
அசோக் சிகாமணி ஏற்கனவே Vice President ஆ இருந்து இப்ப President ஆகி இருக்காப்டி என்று பாஜகவினருக்கு திமுகவினர் பதிலடி”
அவர் கொடுத்த பேட்டி:
“சேப்பாக்கம் மைதான பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து ஜனவரி மாதம் மைதானத்தில் போட்டி நடைபெறும். மகளிர் கிரிக்கெட்டை தமிழ்நாட்டில் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” -தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி உறுதி.