வீழ்த்தப்பட வேண்டியதல்ல ஒழிக்கப்பட வேண்டியது சனாதனம் -உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi video viral

நான் பேசியதில் தவறே இல்லை என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருப்பேன் எந்த மதமாக இருந்தாலும் சரி, அதில் சமத்துவம் இல்லை எனில், அது ஒழிக்கப்பட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

நான் பேசிய வார்த்தையில் உறுதியாக இருக்கிறேன். நீதிமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் சவால்களை எதிர்கொள்ள தயார்’’ - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு சனாதன ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.

காமராஜருக்கு அடுத்தபடியாக இந்தியா முழுவதும் எல்லோரிடமும் சென்று சேரும் தமிழ்நாடு அரசியல் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அவர்களை மாற்றாமல் இந்தக் கூட்டம் ஓயாது போல. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை வைத்துள்ளார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த உ.பி. சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா!

ஈராயிரம் ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கும் சனாதனத்தை, திராவிட - கம்யூனிச சித்தாந்தங்கள் மூலம் வீழ்த்துவோம்; சமத்துவத்தையும் - சமூகநீதியையும் நிலைநாட்டுவோம்…

சனாதனம் வீழட்டும் - திராவிடம் வெல்லட்டும் என்று அரசியல் ரீதியாக கருத்து பரவுகிறது தீயாக.

Video:

Related Posts

View all