நீட் விலக்கு தொடர்பான அதிமுக நிலைப்பாட்டை, கடுமையாக விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நீட் ரத்துக்கு கையெழுத்திட மாட்டேன் என்ற ஆளுநருக்கு அதிமுக ஒரு கண்டனத்தையாவது கூறியதா?
பாஜகவின் பிரதிநிதியான ஆளுநர் அதிமுக கூட்டணியில் தானே இருக்கிறார்?; நீட் தேர்வுக்காக ஜனநாயக போராட்டத்தையும் அதே நேரத்தில் சட்டப் போராட்டத்தையும் திமுக நடத்தும் - அமைச்சர் உதயநிதி.
ஆக 20ல் நீட் தேர்வுக்கு எதிராக மத்திய பாஜக அரசு மற்றும் ஆளுநர் ரவி அவர்களை கண்டித்து திமுக இளைஞரணி & மருத்துவஅணி சார்பில் சாகும் வரை உண்ணாவிர போராட்டம்!
“மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஒன்றிய பாஜக அரசு!”
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிருக்கிறோம். ஆளுநர் ரத்து செய்ய முடியாது என திமிரா பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு மாணவர்களின் மனநிலை புரியாமல் ஆளுநர் தனி உலகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்று திமிராக பேசுகிறார். அது அவரது அறியாமை.
விரைவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்!
-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
--
நீட் தேர்வு - ஏழை எளிய மக்களின் சமூகநீதிப் போராட்டமாக மாறிவிட்டது.
தமிழ்நாடு மாணவர்கள் மீது நீட் தேர்வை திணித்து அவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் பா.ஜ.க. அரசு. நீட் விலக்கு மசோதாவை முடக்கி வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி.
இவர்களால் பணமிருப்பவர்கள் மட்டுமே கோச்சிங் இன்ஸ்டிட்யூட் வழியாக நீட் தேர்வில் பயிற்சி பெற்று வெற்றிபெற முடியும் என்ற அவலநிலையை உருவாகியுள்ளது என்பது மக்களின் கருத்து.