சாதி சான்றிதழ் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து. ஆதரவும் எதிர்ப்பும்.. வீடியோ வைரல்.

Vetrimaran speech about caste

பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்!”

-சென்னையில் நடந்த தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு.

எனக்கு சாதி தேவையில்லை என எனும்போது, அதை மறுப்பதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும்”- இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு.

Context: Schools and colleges ல சாதி சான்றிதழ் தேவையில்லையென்றுதான் நினைக்கிறேன் என்று வெற்றிமாறன் சொல்லும்போது கரவொலி எழுகிறது,வெற்றிமாறன் சற்று சுதாரித்துக்கொண்டு சமூக நீதி அடிப்படையில் உரிமைக்கோருகிற இடத்தில் சாதி சான்றிதழ் கண்டிப்பாக தேவைதான்

தனிப்பட்ட முறையில் எனக்கு தேவையில்லை எனும்போது அதை claim செய்வதற்கு உரிமை வேண்டும் என்கிறார்.

வெற்றிமாறன் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லவில்லை.அவ்வளவுதான்.

வலுக்கும் எதிர்ப்புகள் சில: சாதியை பற்றி பேசலன்னா சாதிக்கொடுமை ஒழிஞ்சுறும்னு சொல்லுறதும், சீப்ப ஒளிச்சு வச்சுட்டா கல்யாணத்தை நிறுத்தீரலாம்னு சொல்லுறதும் ஒன்னு தான்.

நேற்றுவரை இயக்குநர் வெற்றிமாறனை முற்போக்குவாதிகள் என்றார்கள் இணைய உபி க்கள். இன்று பூமர் அங்கிள்கள் என்கிறார்கள்… உலகிலயே முற்போக்கவாதிகள்னா அது இணைய உபி க்கள் தானு அறிவிச்சடலாமா…. வெற்றிமாறன் பேசியது, கண்டிப்பாக சாதி சான்றிதழ் வேண்டும் அதுதான் சமூகநீதிக்கு வழி….

Video:

Related Posts

View all