BREAKING: விஜய் படங்களை இனி யாரும் பார்காதீர் - மதுரை ஆதீனம்.. இவரு ஏன் வான்டெட்டா வண்டில ஏறுறாரு?
மெர்சல் படத்தில் விஜய் ஒரு வசனம் பேசுவார். கோவிலுக்கு பதில் இங்கு ஹாஸ்பிடல் கட்டலாம் என்று. இந்த சீன் அந்த படத்தின் கதைக்களத்திற்கு ஏற்றவாறு இருக்கும். பொதுமக்கள் யாரும் குறை கூறவில்லை.
ஆனால் அப்போது பாஜகவை சேர்ந்த எச்.ராஜா விமர்சனம் செய்தார். அதுவரை எச்.ராஜா யாரென்றே தெரியாமல் இருந்த சிலர் கூட இந்த பிரச்சினையினால் தெரிந்து கொண்டனர். அவருக்கு ஒரு நல்ல நெகட்டிவ் பப்லிசிட்டி கிடைத்தது.
தற்போது இந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பவர் மதுரை ஆதீனம்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், ‘திருக்கோவில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக மாறியுள்ளது. அதனால் அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். ஆன்மீகத்தை திருடிக் கொண்டு திராவிடம் என்கிறார்கள்.
மேலும் இந்துக்களை அவமதிக்கும் விதமாக திரைப்படங்களில் பேசிய நடிகர் விஜயின் படங்களை பார்க்காதீர்கள் என்று பேசியது சர்ச்சை ஆகியுள்ளது.’
ஒரு சாமி என்றும் பாராமல் நெட்டிசன்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.