நடிகர் விஜய் அரசியலுக்கு வரணும்...எனக்கு ஆதரவு தரணும்!- சீமான்
நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது என்று ஒருநாள் சீமான் சொல்வாரு அப்புறம் அதே சீமான் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் வந்து என்னை ஆதரிக்க வேண்டும் என்று சொல்வார் என்று மக்கள் கருத்து.
“விஜய் அரசியலுக்கு வர வேண்டும், அதை வரவேற்பேன்”
“விஜய் அரசியலை நோக்கி வருவது அவரது இயக்கத்தினரின் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது - சீமான்”
“நான் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியதில்லை, விஜய் தான் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இது தான் சீமான் அவர்கள் பேசிய சமீபத்திய பேச்சு. இதுக்கு தான் ஆதரவும், எதிர்ப்பும் வந்த வண்ணம் இருக்கிறது.
“நடிகர் விஜய் அரசியலுக்கு வரணும், எனக்கு ஆதரவு தரணும்”: சீமான். அன்று மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் கட்சியை இணைத்த போது, ஒரு நடிகரோடு கூட்டா என்று கம்யூனிஸ்டுகள் மீது பாய்ந்தார் சீமான். இன்று அவரே ஒரு நடிகரின் தயவை நாடி தவமிருக்கிறார்! காலக் கொடுமைதானே என்று அருணன் விமர்சனம்.