விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் - தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆணை
விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழு நேரில் விசாரணை!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பெண்களிடம் காஞ்சனா கட்ரா குழுவினர், மருத்துவர்கள் உடன் சென்று பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தியதாக தகவல்!
2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அன்பு ஜோதி ஆசிரமப் பெண்களிடம் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தெரிவித்துள்ளார்!
முழுமையான அறிக்கை விசாரணைக்கு பிறகு தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையை தொடர்ந்து தற்போது குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு!
--
கடந்த ஜூலை மாதம் கோவை மாவட்டத்தில் 150 அப்பாவி மக்களை கடத்தி உறுப்பு அறுவடை செய்த கொள்ளைகாரன் ஜூபின் பேபி தான் அன்பு ஜோதி அசிரமத்தை நடத்துபவன் என்றும் சொல்லப்படுகிறது.
விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும், இளம் பெண்களை போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளதும்,பலர் காணாமல் போயுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.