பல பேரின் முகமா நின்னு ஆடும் புலி தானே. விராட் கோலி ஸ்பெஷல். முழு விவரம்.
இதுவரை விளையாடியதிலேயே எனது சிறந்த இன்னிங்ஸாக இதை பார்க்கிறேன்” - விராட் கோலி நெகிழ்ச்சி
முதல் 20 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே… அடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் நிதானமாக நின்றார்… விக்கெட்டை தக்கவைததார்… அடுத்து வெற்றியை இலக்கு வைத்து அடுத்த 33 பந்துகளில் 71 ரன்களை குவித்துவிட்டார்…
விராட் கோலி 🔥🔥❤❤
புலியின் வாய்க்குள் சென்றுவிட்ட ஆட்டின் தலையை உயிரோடு மீட்பது போல அழகாக வெற்றியை மீட்டுவிடும் அசகாய சூரர்களில் ஒருவர் விராட் கோலி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்க்ஸ்களில் ஒன்றை விராட் கோலி இன்று ஆடியிருக்கிறார் என்று பெருமிதத்துடன் கூறலாம். பல திறமைகள் முட்டி மோதுன ஆட்டம்னாலும் இது விராட் கோலி எனும் பரிசுத்தமான வீரனின் உச்சபட்ச Redemption.
இனி தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறேன்… அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
கோலியோட இந்த எழுச்சிய நெனச்சாலே ஒரு செம மோட்டிவேஷனல் பாட்டு, எடிட் பாத்தா மாதிரி இருக்கு. மொத வரிகள்ல இருக்கற மாதிரி விட்டு வச்ச களத்துல சிங்கம் ஒன்னு நுழைஞ்சா மாதிரி தான் இருந்துச்சு. ஆனா நுழைஞ்சது களத்த விட்டு வச்ச அதே சிங்கம் தான்.