2024ம் ஆண்டு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி - இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, எதிர்க்கட்சித்தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளை அனுப்பி உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதிமுக என்பது ஒரு பிரதான எதிர்கட்சி.பாஜக தேசிய கட்சி; அமீத்ஷா வந்தாலோ,பிரதமர் மோடி வந்தாலோ,ஏன் நான் சென்று பார்க்கவில்லை என தவறான பரப்புரையை பத்திரிகைகள் பரப்புகின்றது. 2024-ல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்.அதில் அமமுக- விற்கு 1 % கூட இடம் கிடையாது.
எடப்பாடி மீண்டும் ஒரு முறை மெகா கூட்டணி என்று சொல்லிருக்கிறார். ஆனால் பாஜக பெயரை மீண்டும் கூற வில்லை.
அவர் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருகிறது என நான் கூறுவதில் என்ன தவறு என்று நெட்டிசன்ஸ் கருத்து. அஇஅதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை ,இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர், திரு ரவி பச்சமுத்து அவர்கள் சந்தித்து உள்ளார் . மெகா கூட்டணிக்கு ஒரு அச்சாரம். புதிய வரவு.