இனி இது ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும்.. கர்நாடகா தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது - ராகுல் காந்தி
“முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும்” -டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி
‘‘இனி இது ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும்’’ - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
“பணம் மற்றும் அதிகார பலத்தைக் கொண்டு ஆட்சியை திரும்ப கொண்டு வர பாஜக முயற்சித்தனர், அது தோல்வியில் முடிந்துவிட்டது;
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரின் பிரசாரம் வெற்றி பெற வைத்துள்ளது; கட்சியில் உள்ள அனைவரும் மிக தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உதரணமான தேர்தல் இது!”
- கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், சித்தராமையா பேட்டி.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
“திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது”
- ராகுல்காந்தி தகுதிநீக்கம், இந்தி திணிப்பு, ஊழல் என அனைத்தும், மக்கள் மனதில் எதிரொலித்துள்ளது
- “பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்”
- அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்
- இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்
- கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.
பேச்சுரிமை மறுக்கப்பட்ட ராகுல் காந்தி ♥️, மக்கள் பலம் கொண்டு உரிமை குரல் பெறுகிறார் ✊🏿. 70 வருட தவறுகளை காங்கிரஸ் திருத்தி கொள்ளும் என்று நம்புகிறோம். ஜனநாயகம் மீட்க காங்கிரஸ் வேண்டும் என்று மக்கள் கருத்து.