எங்கள் பெயர் தமிழ்நாடே! நாங்கள் மதவாத அரசியலுக்கு எதிரானவர்கள்.. ஆளுநர் ரவி கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.
சொன்னால் ஓட்டு விழாதோ என்று பாஜக பேசத் தயங்குகிற விஷயங்களை ஆளுநரைவிட்டுப் பேசவைத்து ஆழம் பார்க்கிறார்கள். தமிழ்நாடு பெயர் கூடாது என்பவர்கள் அடுத்து தமிழ்நாடு எனும் மாநிலமே கூடாது, அதை மூன்று அல்லது நான்கு மாநிலங்களாகக் கூறுபோட வேண்டும் என்பார்கள். தமிழா விழித்துக்கொள் என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து.
அடி தொட்டு முடி வரை அளக்க முடியாது தமிழர்களை.
நாங்கள் தமிழர்கள்.
இது தமிழ்நாடு
பெயர் மாற்றம் என்ற எண்ணத்திற்கே இடமில்லை
-கமல்ஹாசன்🔥
ஜுலை 18/1967 அன்று முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பினை அடைந்தவுடன் சட்டப்பேரவையில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்யும் அரசியல் தீர்மானத்தை கொண்டுவந்து, நிறைவேற்றியது பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான #திமுக அரசு.
#தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்-மொழியியல்-அரசியல்-பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்! -அமைச்சர் உதயநிதி ட்வீட்.
தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டிருந்தார்.