தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின் MLA.
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
“உதயநிதி அமைச்சராவதே அனைவரின் ஆசை”
இன்று எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும்
இது தனிப்பட்ட விருப்பமில்லை. ஒட்டுமொத்த திமுக மற்றும் பொதுமக்களின் ஆசையாக உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
கழக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள், இளைஞரணி அறக்கட்டளையின் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகள் வழங்கும் பணியினை இடையறாது தொடர்ச்சியாக செய்து மகத்தான மக்கள் பணியாற்றி வருகிறார்.
திராவிட இயக்கக் கொள்கைகளை அடுத்த தலைமுறையில் தாங்கி நிற்கப் போகிறவர்களுக்கு நம்பிக்கையூட்டி, எதிர்காலத் தலைமுறையின் “நம்பிக்கை நட்சத்திரமாய்” திகழ்கிறார் நமது கழக இளைஞரணி செயலாளர்.
எதிர்கால தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் கழக இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று திமுகவினர் வாழ்த்து.
லேட்டஸ்ட்: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.
சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணித்து அலைகளை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, நிரந்தர சிறப்பு பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்!
சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். ஏனென்றால், இங்கே இருக்கின்ற பெரியவர்களோடு ஒப்பீடு செய்து பார்க்கும்போது, அவர்களுடைய உழைப்பில் நான் மிகமிகச் சின்னவன். அதனால், என்னை சின்னவர் என்றே கூப்பிடுங்கள்-உதயநிதி ஸ்டாலின்