சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு.

Chennai rains cm stalin update

கடந்த ஆண்டுகளைப் போல் மழைவெள்ளப் பாதிப்பு இல்லாத நிலையை உறுதிசெய்ய மழைநீர் வடிகால் - தூர்வாரும் பணிகள் ஓயாமல் நடந்து வருகின்றன" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக ரூ 6.28 கோடி மதிப்பீட்டில் 790 மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக சிங்கார சென்னை phase 1 திட்டத்தின் கீழ் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர்.

அதுமட்டுமில்லாமல் சென்னை சென்ட்ரல் முதல் மூலகொள்ளதம் வரை ரூ 33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 4600மீ நீளத்திற்க்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், N.S.C போஸ் ரோடு பகுதிகளில் மழைநீர் தேக்கத்தினை நிரந்தரமாக அகற்ற ரூ 24 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்வளத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் வகையில்‌ சென்னை பேசின் பாலத்திற்கு அருகில் வடக்கு பக்கிங்காம் கால்வாயில் ரூ 40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ,எம்.பி தயாநிதி மாறன், மேயர் பிரியா, ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வில் பங்கேற்பு.

Related Posts

View all