மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்.. முழு விவரம்.

Chennai weather update

நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12 தேதிகளில் நகரக்கூடும்.

சென்னை வானிலை மையம்: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிற காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று 10,11,12 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

Related Posts

View all