அய்யோ மீண்டும் மீண்டுமா? அதிகரிக்கும் கொரோனா.. அடுத்த அலை பரவுமா? சீனாவால் கிளம்பும் பீதி

Corona tamilnadu status update

சீனா, ஜப்பான், அமெரிக்கா நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதார அமைச்சகம் அறிவுரை

ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்ட்வியா நாளை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்னவென்றால் 47 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தல்

“சீனா, தென்கொரியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், ரஷியா நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அனைத்து மாநிலங்களின் தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். பல நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.”

மீண்டும் கடுமையான கொரோனா வலையில் சிக்கித் தவிக்கிறது சீனா. மருத்துவமனைகள் கூட முழுமையாக இருப்பதாக தெரிகிறது. உலக நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

Related Posts

View all