உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்.. இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது.. வைரல் வீடியோ.

Dmk udhay as minister

அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, திராவிட மாடல் அரசை வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் இன்று இணைகிறேன். இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு, என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன். அன்பும், நன்றியும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகள், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியைத் தொடர்வேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ட்விட்டர் Bio-வை மாற்றினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சராக இன்று பொறுப்பேற்கும் திரு. உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - தங்கள் சாதனைகள் தொடர்ந்து வெற்றி பெற - நலம் பெற நெஞ்சார்ந்த என்று யோகிபாபு ட்வீட் செய்துள்ளார். மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றியமைக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்.

இன்று அமைச்சராக பதவியேற்ற மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் பிரதர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.‌ எல்லாம் வல்ல இறைவனும் இயற்கையும் உங்கள் துணை இருக்க வேண்டுகிறேன் என்று நடிகர் சூரி ட்வீட் செய்துள்ளார். இளைஞர்களின் எழுச்சியாய் உருவெடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வளமான தமிழகம் படைக்க இன்று போல் என்றும் தொடர்ந்து பயணிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு ட்வீட்.

Video:

Related Posts

View all