பெரியார் மண்ணை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்கிவிட முடியாது.. கி.வீரமணி அனல் பறக்க பேச்சு.

Kee veeramani birthday latest video

திராவிடர் கழகத்தின் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்தோடு வாழ்வாங்கு வாழ உளமார்ந்த பேரன்புடன் மனமார வாழ்த்துகிறேன் - சீமான் ட்வீட்.

கி.வீரமணி பிறந்தநாள் விழாவில், அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்பு வழங்கும் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினர்!

”இன்றும் போர்க்களம் நோக்கி செல்வதற்கு தயாராக இருக்கும் தலைவர்தான் ஆசிரியர் வீரமணி…”-தி.க. தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

”பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சமூக நீதியை குழி தோண்டி புதைப்பதற்கான முயற்சி..”
-தி.க. தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

ஆர்எஸ்எஸ்-ன் பார்வை என்பது உயர்ந்த சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய பார்வை; உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவது என்பது சமூக நீதிக்கான நிலைப்பாட்டை குலைப்பது. பெரியார் மண்ணை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்கிவிட முடியாது.. ஒருபோதும் காலி மண்ணாகவும் ஆக்கிவிட முடியாது..” -தனது பிறந்தநாள் விழாவில் கி.வீரமணி அனல் பறக்க பேச்சு வீடியோ வைரல்.

Video:

Related Posts

View all