ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்! ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின்.. வீடியோ வைரல்.

Mk stalin in japan video viral

ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்!

கட்டுமானம், சுரங்கம் போன்ற மிகக் கடுமையான மனித உழைப்பைக் கோரும் துறைகளில், பணிகளை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடித்திடும் கருவிகளை உற்பத்தி செய்யும் நூற்றாண்டு பழமையான #Komatsu நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டேன்.

ஏற்கனவே கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் #Komatsu தொழிற்சாலையை அமைச்சராகத் திறந்து வைத்த அதே உணர்வுடன், அந்நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரி, #GIM2024-க்கு அழைப்பு விடுத்தேன்.

மக்கள் கருத்து:

மிகவும் அற்புதம் முதல்வர் அவர்களே, விவசாயத்தை இந்தியாவில் சிறந்த மாநிலமாக திகழ, தேவையான பல்வேறு புது வித் எளிதான விவசாய தொழினுட்பம் மற்றும் சாதனகள் போன்றவற்றை முதலீடு ஈர்க்க அங்கே உள்ளவற்றை துறை சான்றதவற்களிடம் நமக்கு பயனுள்ளதை எடுத்து வாருங்கள். நன்றி.

எல்லா சந்திப்புகளும் உடனடி முதலீடாகிவிட முடியாது. கதவுகளைத் தொடர்ந்து திறக்கிறீர்கள். காற்று, உள்ளே வந்துதானே ஆக வேண்டும்! வாழ்த்துகள்!!

வாழ்த்துக்கள் தமிழ்நாட்டின் இன்றைய தேவைகள் உணர்ந்து சரியான நேரத்தில் komatsu நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது, நம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும்.

Related Posts

View all