மக்களை தேடி மருத்துவம்.. ஒரு கோடியை கடக்கும் மகத்தான சாதனை. முக.ஸ்டாலின் உரை. முழு விவரம்.

Mks dmk speech today

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் பயனடையும் 1 கோடியே 1வது பயனாளியான மீனாட்சி என்பவருக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 20,000 சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ₹1000 உயர்த்தி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது; மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன”

-அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

“மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன்; மக்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க கூடிய மகத்தான திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம்”

“விமர்சனத்துக்கு தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெறுபவர் உதயநிதி; விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது”

“திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்; ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராகவே ஒலிம்பிக் அகாடமி”

“உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக் கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன”

“பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது; தமிழ்நாட்டில் 4,38,000 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன; 50,24,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்”

“மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க முதல்முறையாக முனைப்பு காட்டியது திமுக அரசுதான்; இந்தியாவில் முதல்முறையாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தவர் கலைஞர்”

“மகளிர் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை அரசின் கடமையாகவும், பொறுப்பாகவும் நினைக்கிறோம்; சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது”

“தமிழ்நாட்டையும், தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்”

-அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

Related Posts

View all