உதய் உடன் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள்.. இதற்கு காரணம் உடற்பயிற்சிதான்

Mkstalin about fitness video viral

“நானும் என் மகனும் சென்றால் அண்ணன்- தம்பி என்பார்கள்.

இன்றைய தலைமுறையினர் உடல்நலனும் உள்ளநலனும் பேண HappyStreets போன்ற முன்னெடுப்புகள் ஊக்கமாக அமைய வேண்டும் - முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ‘‘மகிழ்ச்சியான தெருக்கள்’’ (Happy Streets) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாளை சென்னை தினத்தையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘Happy Birthday Madras’ என்ற பதாகைமுன் பொதுமக்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.

‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ ஒருங்கிணைந்து சென்னை மாநகரில் நடைபயிற்சி மற்றும் மிதிவண்டி பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகரில் நடத்திய “மகிழ்ச்சியான தெருக்கள்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிதிவண்டி ஓட்டினார்.

Video:

Related Posts

View all