9 வருட சாதனைகளை கூற அமித்ஷா தயாராக உள்ளாரா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி. Video Viral.

Mkstalin amit shah video

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது சாலையில் உள்ள மின் விளக்குகள் அணைந்ததால் பரபரப்பு!

பொதுமக்களுக்கு இடையூறாக பாஜகவினர் சாலை மறியல்!

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் வந்திறங்கி சாலை பேரணி துவங்கும் நேரத்தில் சென்னையின் முக்கிய பிரதான சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று பாஜகவினர் கொந்தளிப்பு.

நமது நாட்டின் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உடனேயே , மின் துண்டிப்பு ஏற்படுத்தி வேண்டும் என்றே அவருடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலும் தொண்டர்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்த முயன்ற திமுகவை எச்சரிக்கின்றோம் என்று பாஜகவினர் மிரட்டல்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்

தமிழகத்தில் தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள் என 24 முக்கிய பிரபலங்களை இன்று சந்திக்கிறார் அமித்ஷா.

தமிழகத்திற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தெய்வபுலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை (அறத்துப்பால் அதிகாரம்) வழங்கி தமிழக மக்கள் சார்பில் அன்போடு வரவேற்றேன். - மத்திய இணையமைச்சர் டாக்டர் .எல்.முருகன்

Video:

Related Posts

View all