முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்.

Mkstalin meeting update

முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு முதலமைச்சர்ஸ்டாலின் தலைமையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

#EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சமூகநீதிக்கு எதிரானது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக அரசு 10% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாது என அறிவித்திருப்பதை விசிக சார்பில் வரவேற்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து.

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு கொடுப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று பாஜக மணிலா தலைவர் அண்ணாமலை கருது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்திட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக.

Related Posts

View all