பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். மோடி உருக்கம். வீடியோ வைரல்.

Narendra modi mother paased away report

அகமதாபாத் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) காலமானார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் காலமானார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது என பிரதமர் மோடி உருக்கம்.

பாஜகவினர் டிவீட்ஸ்:

பிரதமர் மோடிஜியின் தாய் மதிப்பிற்குரிய ஹீராபென் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி. இந்த துக்க நேரத்தில், மோடி ஜியின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமை அளிக்கட்டும். ஓம் சாந்தி!

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். (குறள்-69) எனும் திருவள்ளூவரின் குறளுக்கு இலக்கணமாய் திகழ்ந்த பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்களின் மறைவு மனவருத்தம் அளிக்கிறது.

சிங்கத்தை ஈன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஆலமரத்தை கொடுத்த பாரத பிரதமர் மோடி அவர்களின் தாயாரின் இறப்பு தாங்க முடியாத ஒரு துயரம்! அவரது ஆன்மா இறைவனது திருவடியில் இளைப்பாற வேண்டுகிறேன்.

--

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

“தாயாரை இழந்த துயரத்தை யாராலும் தாங்க முடியாது; உங்களது இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என சொல்ல வார்த்தைகள் இல்லை; எனது ஆழ்ந்த இரங்கலையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

“பிரதமர் மோடி அவர்களே, உங்கள் தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம்” - முதலமைச்சர் ஸ்டாலின்

“பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு மிகவும் வருந்ததக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” - ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்

குஜராத்தின் காந்தி நகரில் உள்ள வீட்டில், தாயார் ஹீராபென் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரின் உடலை சுமந்து சென்றார் பிரதமர் மோடி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all