நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்.. ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது. கமல் விமர்சனம்.

Nirmala sitaraman budget speech

நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% சதவீதமாக இருக்கும்

நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் ஹெலிபேடுகள் உருவாக்கப்படும்

நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்

தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹7 லட்சமாக உயர்வு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தனி நபர் வருமான வரிகள் விபரம் :

0-3 லட்சம் - இல்லை 3 -6 லட்சம் -5% 6-9 லட்சம்-10 % 9-12- லட்சம்-15% 12-15 லட்சம்- 20% 15 லட்சம் மேல்-30%

-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம் .

Kamalhaasan Tweet:

கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை.

நடுத்தர வர்க்கத்திற்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் மிடில்க்ளாஸ் மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப்போவதில்லை. கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை.

சேமிப்பிற்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் பட்ஜெட்டில் பளிச்சிடுகின்றன. வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது.

Related Posts

View all