ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் - தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.

Online rummy banned in tn

பல உயிர்களை காவு வாங்கிய, பல அரசியல் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை தமிழக அரசு ஒப்புதல் தந்துள்ளது. மிகச்சிறந்த முன்னெடுப்பு இது.

ஒரு வழியா ஆன்லைன் ரம்மிக்கு தடை கொண்டு வந்துட்டானுங்க. இனியாவது ரம்மி சூதாட்டத்தால் தற்கொலைகள் நடக்காமல் இருக்கட்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் போட்ட ட்வீட்:

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது!

அண்மைக்காலங்களில் ஆன்லைன் சூதாட்டம் தான் தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று 2016-ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறேன். முந்தைய ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிய அவசர சட்டத்தை அரசு கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது!

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு விரைவாக ஆளுனரின் ஒப்புதலை பெற வேண்டும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்!

Related Posts

View all