தாமதிக்கும் தண்டனையும் மறுக்கப்படும் நீதியும் இரண்டுமே ஒன்றுதான். மக்கள் கொந்தளிப்பு.

Sathya sathish case update

ரயில் நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனை அடுத்து அங்கு வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு, சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார்

தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார், அந்த கேசில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சதீஷ்-க்கு அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவல். மாணவியின் தந்தை ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர், தாய் காவல் துறையில் ஹேட் கான்ஸ்டபிள். கொலையாளி சதீஷ் ஏற்கனவே இந்த பெண்ணிடம் ரகளை செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. காவல்துறை குடும்பத்தினருக்கே இந்த நிலைமை. என்று திமுகவை எதிர்க்கட்சிகள் விசாரணை.

ரயிலில் தள்ளி காதலரால் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு. “கடந்த 3 நாட்களாக சதீஷ் திட்டமிட்டு கொண்டிருந்தார். ரயிலை பார்த்ததும் சத்யாவை தள்ளிவிட்டார்” - ரயில்வே ஏ.டி.ஜி.பி வனிதா.

சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்🔴

-நடிகர் விஜய் ஆண்டனி கொந்தளிப்பு.

கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளி இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். -தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை.

தாமதிக்கும் தண்டனையும் மறுக்கப்படும் நீதியும் இரண்டுமே ஒன்றுதான் ஆகவே இவ்வாறான சதீஷ் போன்றவை உடனடியாக தண்டிக்க வேண்டுகோள்.

Related Posts

View all