TTF வாசன் வீலிங் சாகசம் செய்ய முற்பட்ட சாலையில் தூக்கி வீசப்பட்ட பிரத்யேக வீடியோ காட்சி.

Ttf vasan bike stunt

சாகசம் செய்ய முயன்று விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்

காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்றபோது, சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் வாசனுக்கு கையில் காயம்!

தரமான ஹெல்மெட், விலை உயர்ந்த Jackets, பாதுகாப்பான கையுறைகள், Branded Shoes என ஒரு தேர்ந்த Bike Racer ஆக எல்லாவற்றையும் முறையாக கடைப்பிடித்ததால்தான் 245Kmh வேகத்தில் வந்து நெடுஞ்சாலையில் Wheeling செய்தும் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிறிய காயங்களோடு பிழைத்திருக்கிறார். ஆனால் அவருடைய உயிர் குறித்து அவருக்கு இருக்கும் முன்னெச்சரிக்கை மற்றவர்கள் உயிர் குறித்தும் இருந்திருக்க வேண்டும்.

  1. Bike Racing செய்வதற்கான நோக்கத்தில் தரத்தில் இந்திய நெடுஞ்சாலைகள் செப்பனிடப்படவில்லை.
  2. பொதுப்போக்குவரத்துக்கான பயணத்தில் இருக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு 245கிமீ வேகத்தில் வருவது என்பது திட்டமிட்ட ஒரு கொலை முயற்சி.
  3. அடிப்படை கட்டமைப்பு இல்லாத நாட்டில் இந்த அதிவேக சாகசத்தை தனித்திறமை என யூடியூபில் விளம்பரம் செய்வது அவரது Followers ஐயும் தவறாக வழிநடத்துவது மேலும் விபத்துக்களை அதிகரிக்கும் ஆபத்தை கொண்டது.

~ அரசு உடனடியாக அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ~ வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தான் பல மக்களின் கருத்தாக இருக்கிறது.

ஒருவேளை TTFக்கு எதிர்ல ஒரு குடும்பம் பைக்குல வந்தருந்தா அவங்க நிலமை என்ன ஆகிருக்கும்??? வாசன் பைக் கன்ட்ரோல் இல்லாம கீழ விழல.. பைக்ல சாகசம் பண்றேனு விழுந்துருக்கான்.

Video:

Related Posts

View all