மு.க. உதயநிதி ஸ்டாலின் எனும் நான்.. நாளை மறுநாள் அமைச்சராகிறார். லேட்டஸ்ட் அப்டேட்.

Udhayandhi stalin minister update

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14ஆம் தேதி காலை 9.30 மணியளவில் அமைச்சராகப் பதவியேற்கிறார் என ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு. இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.

1957இல் MLA ஆன கருணாநிதி 1967இல் அமைச்சர் ஆனார். (10 ஆண்டுகள்)

1989இல் MLA ஆன ஸ்டாலின் 2006இல் அமைச்சர் ஆனார். (17 ஆண்டுகள்)

2021இல் MLA ஆன உதயநிதி 2022இல் அமைச்சர் ஆகிறார். (1 ஆண்டு)

திராவிட இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராவது சரியான அரசியல் முடிவு. முதலமைச்சரின் பணிச்சுமைகள் வெகுவாக குறையும். திராவிட இயக்க இளஞர்களின் அரசியல பயணத்திற்கு தேவைப்படுகின்ற தலைவராக அவர் இருப்பார் என்று மக்கள் கருத்து.

கலைஞர் பேரன், ஸ்டாலின் பையன்னு சொல்லித்தான் உதயநிதி ஸ்டாலின் ஓட்டுக் கேட்டார். அது தெரிந்துதான் மக்களும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை கொடுத்தனர்.

Udhayandhi stalin minister update

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பொறுப்பு தருவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்குட்பட்டது.மஹாராஷ்டிராவைப் போல் ஆட்சியை கலைத்து கட்சியை இரண்டாக உடைத்து நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாவை போல் ஏக்நாத் ஷிண்டே என்ற பொம்மையை முன்னிறுத்தி முடி சூட்டிக் கொள்ளவில்லை திராவிட முன்னேற்றக் கழகம்.

இது முழுக்க முழுக்க 2021ல் மக்கள் அளித்த தீர்ப்பினால் உருவான அரசாங்கம் இது என்று பஜாகக்கு திமுகவினர் பதிலடி.

Related Posts

View all